தீராத கழுத்து வலியை விரைவில் போக்க இதை ட்ரை பண்ணுங்க

By Gowthami Subramani
09 Dec 2024, 21:56 IST

பெரும்பாலும் தவறான தூக்கநிலை மற்றும் நீண்ட நேரம் ஒரே பக்கத்தில் இருப்பது பல்வேறு காரணங்களால் கழுத்து வலி பிரச்சனை ஏற்படலாம். எனினும், கழுத்து வலியிலிருந்து விடுபட சில இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்

கழுத்து நீட்சி பயிற்சி

நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும், பதற்றத்தை போக்கவும் கழுத்து தசைகளை மெதுவாக நீட்ட வேண்டும். இதற்கு நெக் ரோல்ஸ், ஷோல்டர் ரோல்ஸ் மற்றும் கழுத்தை சாய்த்து, வளைத்து, சுழற்ற முயற்சி செய்யலாம்

கல் உப்பு

கழுத்து வலியைப் போக்குவதற்கு, வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து கழுத்தில் தடவலாம். இது கழுத்து வலியைப் பொக்க உதவுகிறது

கடுகு எண்ணெய்

இதில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு கழுத்தில் மசாஜ் செய்வது வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது

இஞ்சி

கழுத்து வலியிலிருந்து விடுபட இஞ்சி மற்றும் தேன் பயன்படுத்தலாம். இதற்கு இஞ்சி விழுதில் தேன் சேர்த்து கழுத்தில் தடவ வேண்டும். இது கழுத்து வலியிலிருந்து நிவாரணம் தர உதவுகிறது

புதினா எண்ணெய்

இது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. புதினா எண்ணெயைப் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்வது வலியைப் போக்க உதவுகிறது