குளிர்காலத்தில் ஏற்படும் தலைவலியை போக்க என்ன செய்வது?

By Gowthami Subramani
12 Dec 2024, 17:45 IST

குளிர்ந்த காற்றினால் ஏற்படும் தலைவலி குளிர்ச்சியான தலைவலி என்றழைக்கப்படுகிறது. இது மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம். இதில் குளிர்காலத்தில் ஏற்படும் தலைவலியைப் போக்க உதவும் சில விரைவான வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

யோகா செய்வது

குறிப்பிட்ட சில யோகாசனங்களைச் செய்வதன் மூலம் குளிர்ச்சியான காலகட்டத்தில் தலைவலி ஏற்படலாம். யோகா செய்வது தலைவலி மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது

எண்ணெய் மசாஜ்

வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு தலையை மசாஜ் செய்வது மிகவும் நன்மை பயக்கும். இதற்கு கடுகு எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யலாம். இது தசைகளை தளர்த்துவதுடன் தலைவலியிலிருந்து நிவாரணம் தருகிறது

இஞ்சி கஷாயம்

இது உடல் வெப்பத்தை பராமரிப்பதுடன், தலைவலியிலிருந்து விரைவான நிவாரணம் தர உதவுகிறது. மேலும், இது வீக்கத்தைக் குறைக்கவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது

போதுமான ஓய்வு

போதுமான ஓய்வு பெறுவது தலைவலிக்கு சிறந்த சிகிச்சையாகும். ஏனெனில் போதிய தூக்கமின்மையால் தொடர் தலைவல் உள்ளிட்ட நரம்பியல் நோய்கள் ஏற்படலாம். எனவே தினமும் 7 முதல் 9 மணி நேரம் தூங்குவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்

குளியல் செய்வது

வெதுவெதுப்பான குளியல் உடலில் இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. இவ்வாறு செய்வது தலைவலியைக் குறைக்க உதவுகிறது

காஃபின் உட்கொள்வது

சளி காரணமாக தலைவலி இருப்பின் சூடான விளைவைக் கொண்ட பொருள்களை உட்கொள்ள முயற்சிக்கலாம். அதன் படி, தலைவலியின் போது தேநீர் அல்லது காபி குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது