வறட்டு இருமலை போக்கும் 5 வீட்டு வைத்தியங்கள்!!

By Ishvarya Gurumurthy G
06 Feb 2024, 02:14 IST

வறட்டு இருமல் மற்றும் தொண்டை கட்டுப் பிரச்னையை குணப்படுத்த வழி தேடுகிறீர்களா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இங்கே. படித்து பயன் பெறவும்.

மஞ்சள் பால்

மஞ்சள் பால் உடலுக்கு மிகவும் நல்லது. மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் வறட்டு இருமலை குணப்படுத்துவதோடு, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

தேன்

தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் இருமல் மற்றும் தொண்டை புண் பிரச்னையைக் குணப்படுத்த உதவுகிறது.

வாய் குப்பளித்தல்

வெதுவெதுப்பான நீரில் வாய் கொப்பளித்தால் இருமல் மற்றும் தொண்டை கட்டுப் பிரச்னை குணமாகும். விருப்ப பட்டால் வெந்நீருடன் ஒரு சிட்டிகை கல்லுப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் வறட்டு இருமலை குணப்படுத்த உதவுகிறது. மாதுளை ஜூஸ் உடன் ஒரு சிட்டிகை சுக்கு அல்லது கருப்பு மிளகு தூள் சேர்த்துக் குடிக்கவும். இது வறட்டு இருமல் மற்றும் தொண்டை கட்டு பிரச்னையைக் குணப்படுத்துகிறது.

தேங்காய் எண்ணெய் மசாஜ்

தேங்காய் எண்ணெயுடன் ஓமம், பூண்டு சேர்த்து மிதான தீயில் எண்ணெயை சூடாகவும். சூடு தனிந்த பின் வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்தால் வறட்டு இருமல் நீங்கும்.