வாய் துர்நாற்றம் டக்குனு சரியாக உதவும் வீட்டு வைத்தியம்

By Gowthami Subramani
06 Jul 2024, 09:00 IST

வாய் துர்நாற்றம் ஏற்படுவது மிகவும் பொதுவானதாகும். ஆனால் இதைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம். இதில் வாய் துர்நாற்றம் நீங்க உதவும் வைத்தியங்களைக் காண்போம்

நல்ல வாய்வழி சுகாதாரம்

ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்க வேண்டும். மேலும் நாள்தோறும் வாயைக் கொப்பளிக்க வேண்டும். குறிப்பாக, உணவுக்குப் பிறகு வாயைக் கொப்பளிப்பது வாய் துர்நாற்றத்திற்குக் காரணமான உணவு துகள்கள் மற்றும் பிளேக் அகற்ற உதவுகிறது

நீரேற்றமாக இருப்பது

நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பது, வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது. இது வாயை ஈரமாக வைத்திருக்கவும், உமிழ்நீர் உணவுத் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கழுவவும் உதவுகிறது. மேலும் வாய் வறட்சியைத் தடுக்கிறது

மொறுமொறுப்பான பழங்கள், காய்கறிகள்

கேரட், செலரி மற்றும் ஆப்பிள் போன்ற மொறுமொறுப்பான பழங்கள், காய்கறிகளை உட்கொள்வது பற்களை சுத்தப்படுத்தவும், உமிழ்நீர் உற்பத்தியைத் தூண்டவும், வாய் துர்நாற்றத்தின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

கடுமையான வாசனை உணவுகளைத் தவிர்ப்பது

பூண்டு, வெங்காயம் மற்றும் காரமான உணவுகள் போன்ற கடுமையான வாசனையுடன் கூடிய உணவுகள் உட்கொள்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். இதன் மூலம் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்

மவுத்வாஷ் பயன்பாடு

ஆண்டிமைக்ரோபியல் மவுத்வாஷின் உதவியுடன் வாயைக் கழுவ வேண்டும். குளோரெக்சிடின், அத்தியாவசிய எண்ணெய்கள் போன்ற பொருட்களைக் கொண்டு வாயைக் கழுவலாம். இவை வாயில் பாக்டீரியாவைக் குறைக்கவும், புத்துணர்ச்சியுடன் வைக்கவும் உதவுகிறது

புகைபிடிப்பதை நிறுத்துதல்

புகையிலை பொருட்கள் தொடர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், இது பற்களில் கறை மற்றும் ஈறு திசுக்களை எரிச்சலடையச் செய்யலாம். எனவே சுவாசம் மற்றும் ஒட்டுமொத்த வாய் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்