மூட்டு வலி குறைய இந்த ஒரு மூலிகையை எடுத்துக்கோங்க

By Gowthami Subramani
13 May 2024, 09:00 IST

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். இதில் மூட்டு வலியைக் குறைக்க கசகசா உதவுகிறது. மூட்டு வலியைக் குறைக்க கசகசாவை எவ்வாறு உதவுகிறது என்பதைக் காண்போம்

கசகசா

கசகசாவை உணவில் சேர்த்துக் கொள்வது, உடலில் எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிக அளவில் மேம்படுத்துகிறது. இது மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது

பாலில் ஊறவைத்த கசகசா

அன்றாட உணவில் கசகசாவை எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும். கசகசாவை பாலில் ஊறவைத்து லஸ்ஸியாக எடுத்துக் கொள்ளலாம்

கசகசா புட்டு

கசகசாவை வைத்து புட்டு தயாரித்து எடுத்துக் கொள்ளலாம். இது மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது

கசகசா சர்பத்

கசகசாவை தண்ணீரில் கலந்து சர்பத்தாக தயார் செய்து அருந்தலாம்

மற்ற வழி

கசகசாவை பராத்தா/ரொட்டி அல்லது சாலட்டில் சேர்த்து சாப்பிடலாம். இவ்வாறு தினசரி வழக்கத்தில் ககசாவை சேர்த்துக் கொள்ளலாம்

வரம்பிற்குள் உண்ணுதல்

கசககசா விதைகளை வரம்பிற்கும் மட்டும் உட்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய கசகசா விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்

எலும்பு வலுவாக

கசகசாவில் நல்ல அளவிலான கால்சியம் சத்துக்கள் உள்ளது. இவை எலும்புகளை வலுவாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது

மற்ற நன்மைகள்

அன்றாட உணவில் மிதமான கசகசாவை எடுத்துக் கொள்வது மூட்டு வலி தவிர செரிமான ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் போன்ற மற்ற உடல் பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது