மழைக்காலத்தில் தொண்டை வலி சரியாக உதவும் வீட்டு வைத்தியங்கள்

By Gowthami Subramani
14 Jun 2024, 16:34 IST

மழைக்காலத்தில் பலரும் அடிக்கடி சளி மற்றும் இருமல் பிரச்சனைகளை அனுபவிக்கின்றனர். இதில் தொண்டைப் பிரச்சனையும் அடங்கும். மழைக்காலத்தில் தொண்டை வலி பிரச்சனையைத் தவிர்க்க உதவும் வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

வெதுவெதுப்பான நீர்

வெதுவெதுப்பான நீரை அருந்துவது செரிமானத்தை சீராக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது தொண்டை வலியைப் போக்க உதவுகிறது

மஞ்சள் பால்

சளி அல்லது காய்ச்சல் பிரச்சனை கொண்டவர்கள் மஞ்சள் கலந்த பால் குடிக்கலாம். மஞ்சளில் உள்ள கிருமி நாசினி பண்புகள், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் தொண்டை புண்களை நீக்கி வலியிலிருந்து நிவாரணம் தருகிறது

தேன்

தொண்டை வலியை நீக்குவதில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் தொண்டை பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. இது ஒரு டீஸ்பூன் தேனை நேரடியாகவோ, வெதுவெதுப்பான நீரில் தேன் சேர்த்தோ அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்

இஞ்சி டீ

இஞ்சி டீ அருந்துவது தொண்டை வலியை போக்க உதவுகிறது. இஞ்சி டீ தொண்டை வீக்கத்தைக் குறைக்கிறது. ஒரு சிறிய துண்டு இஞ்சியை வெந்நீரில் சேர்த்து, பிறகு தேன் சேர்த்து அருந்தலாம்

அதிமதுரம்

இது தொண்டை வலியைப் போக்க உதவும் சிறந்த மூலிகையாகும். இவை தொண்டை புண், வலி மற்றும் இருமல் போன்றவற்றிற்கு பயனுள்ளதாக இருக்கும்