இரத்த ஓட்டத்தின் விசை இயல்புக்கு மாறாய் இருப்பதை தான் இரத்த அழுத்தம் என்கிறோம். இந்த இரத்த அழுத்த பிரசனையை மருந்து - மாத்திரை இல்லாமல் கட்டுப்படுத்த உதவும் வழிகள் பற்றி பார்க்கலாம்.
எடை கட்டுப்பாடு
உடல் எடை அதிகரிக்கும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். உடல் எடையை குறைப்பது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். அதாவது, இடுப்பு பகுதியில் உள்ள கூடுதல் சதை குறையும் அளவிற்கு உங்கள் உடல் எடையை குறைக்கவும்.
உடற்பயிற்சி
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது 5 - 8 mmHg உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும். எனவே, தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்வது நல்லது.
ஆரோக்கிய உணவுகள்
சோடியம் நிறைந்த உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, எனர்ஜி பங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான உணவு வழக்கத்தை கடைபிடிப்பதால், உங்களின் BP அளவை கட்டுக்குள் வைக்கலாம்.
மதுவை கைவிடுங்கள்
அளவுக்கு அதிகமான மதுபானம் இரத்த அழுத்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே, நாள் ஒன்றுக்கு 12 அவுன்சு பியர் அல்லது 5 அவுன்சு ஒயின் அல்லது 1.5 அவுன்சு உள்ள ஆல்கஹால் கொண்ட பானங்களை கைவிடவும்.
புகைப்பிடித்தல்
புகைப்பிடிக்கும் போது நம் இரத்த அழுத்தம் ஆனது 4 - 6 mmHg அளவிற்கு உயரும். மேலும், இரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய மாரடைப்பு, இதய செயலிழப்பு பிரச்சனைக்கு வழிவகுக்கும்.
சரியான தூக்கம்
போதுமான அளவு இரவு நேர தூக்கம் மிகவும் அவசியம். இதனால், இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் வைக்கலாம். மேலும், இரவு தூங்க செல்வதற்கு முன் மலம் கழிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதும் நல்லது.
டீ - காஃபியை தவிர்க்கவும்
காஃபின் உள்ளடக்கம் நிறைந்த காஃபி மற்றும் தேநீர் அளவை குறைத்துக்கொள்வதும் இந்த இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவும். இதற்கு பதில் மூலிகை டீ குடிக்கலாம்.