வயிற்றுப்போக்கை நிர்வகிக்க புரோபயாடிக்குகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது. ஏனெனில் இது குடல் சமநிலையை மீட்டெடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதில் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த புரோபயாடிக்குகள் எவ்வாறு உதவுகிறது என்பதைக் காணலாம்
குடல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க
வயிற்றுப்போக்கு ஏற்படும் போது பெரும்பாலும் குடலில் உள்ள நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களின் சமநிலை சீர்குலைக்கப்படுகிறது. இந்நிலையில் புரோபயாடிக்குகள் நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை நிரப்புகிறது. இது சாதாரண செரிமானத்தை மீட்டெடுக்க உதவுகிறது
ஆண்டிபயாடிக்-தொடர்புடைய வயிற்றுப்போக்கு
ஆண்டிபயாடிக்குகள் தீங்கு விளைவிக்கும் மற்றும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கலாம். இது வயிற்றுப்போக்கு ஏற்பட வழிவகுக்கிறது. இந்நிலையில் புரோபயாடிக்குகள் இந்த விளைவை எதிர்க்க உதவுகிறது
வயிற்றுப்போக்கு தீவிரத்தைக் குறைக்க
புரோபயாடிக் நிறைந்த உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்டுகள் வயிற்றுப்போக்கின் கால அளவைக் குறைக்கலாம். குறிப்பாக தொற்றுகள் அல்லது ஆண்டிபயாடிக் பயன்பாடு ஏற்பட்டால் புரோபயாடிக்குகள் உதவுவதாகக் கூறப்படுகிறது
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த
புரோபயாடிக்குகள் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இது வீக்கத்தைக் குறைக்கவும், சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த
ஆரோக்கியமான குடல் உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடிய நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது
தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ் மூலம் அன்றாட உணவில் புரோபயாடிக்குகளைச் சேர்ப்பது நல்ல குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த உதவுகிறது