குடலில் சிக்கிய மலத்தை ஈசியாக வெளியேற்றுவது எப்படி?

By Kanimozhi Pannerselvam
26 Mar 2025, 20:09 IST

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மலத்தை எளிதாக வெளியேற்ற உதவும் ஓட்ஸ், பிரவுன் அரிசி, கோதுமை ரொட்டி, ஆப்பிள், பேரிக்காய், பெர்ரி, ப்ரோக்கோலி, கேரட், இலை கீரைகள், பீன்ஸ், பருப்பு உதவும்

அதிக அளவிலான திரவங்கள்

மலத்தை மென்மையாக்க நாள் முழுவதும் நிறைய தண்ணீர் மற்றும் பிற திரவங்களை குடிக்க வேண்டும். குறிப்பாக வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி வயிற்றைச் சுத்தப்படுத்த உதவும்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்

ஒரு நாளைக்கு 2.5 லிட்டர் / 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இது குடலில் உள்ள எந்த உணவையும் எளிதாக்க உதவும்.

சார்பிட்டால் அதிகமுள்ள உணவுகள்

ஆப்பிள், ஆப்ரிகாட், திராட்சை மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பழங்கள் மலத்தை மென்மையாக்க உதவும் என்று அறியப்படுகிறது.

மசாலா பொருட்களின் மேஜிக்

பெருஞ்சீரகம், புதினா, இஞ்சி போன்ற மூலிகைகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றைச் சுத்தப்படுத்த உதவுகிறது

புரோபயாடிக் உணவுகள்

தயிர், திராட்சை போன்ற புரோபயோடிக் நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கவும், மலம் கழிப்பதில் உள்ள பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது.

எலுமிச்சை சாறு

குடல் இயக்கத்தை ஊக்குவிக்க படுக்கைக்குச் செல்லும் முன்பும், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் எலுமிச்சை கலந்த வெதுவெதுப்பான நீரைப் பருகலாம்.