அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனையா? இத சாப்பிடுங்க

By Gowthami Subramani
16 Jun 2024, 09:00 IST

வயது மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு நிலைகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஒரு அறிகுறியாக அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனை நடைபெறும். இதைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்

வெந்தய விதைகள்

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் வெந்தய விதைகள் உதவுகிறது. வெந்தய விதைகளை தினமும் தூள் வடிவின் மூலம் அல்லது விதைகளை விழுங்குதல் போன்றவற்றின் மூலம் இந்த பிரச்சனையைத் தவிர்க்க முடியும்

மாதுளை விழுது

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு முக்கிய காரணியாக இருப்பது ஈகோலி என்ற பாக்டீரியா ஆகும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழித்தல் நிகழ்வு ஏற்படலாம். அதன் படி மாதுளை தோலில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் சிறுநீர் பாதைகளைத் தொற்றுக்களை அழித்து, அடிக்கடி சிறுநீர் கழித்தலைத் தடுக்கிறது

ஆம்லா

நெல்லிக்காய் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது சிறுநீர் வெளியேற்றுவதை ஊக்குவிப்பதாக இருப்பினும், சிறுநீர் ஓட்டத்தை அதிகமாக தூண்டுவதில்லை. அதன் படி, ஆம்லா சாற்றை மாற்று நாட்களில் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிப்பதைக் கட்டுப்படுத்த உதவும்

சீரகம்

இது பல்வேறு பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிரான செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இது நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளதால், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் காரணமாக ஏற்படும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதில் இருந்து விடுபட உதவுகிறது

துளசி

இது பல்வேறு பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதனை உட்கொள்வது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்ற பல்வேறு நோய்த்தொற்றுக்களை நிர்வகிக்க உதவுகிறது. இதன் மூலம் அடிக்கடி சிறுநீர் கழித்தல் பிரச்சனையைத் தவிர்க்கலாம்