தொண்டைக்குப் பின்னால் குரல்வளையில் வீக்கம் ஏற்படுவதால் தொண்டை புண் ஏற்படுகிறது. பொதுவாக தொண்டை வலியால் அரிப்பு, வீக்கம், அசௌகரியம் போன்றவை ஏற்படலாம்
உப்பு நீர் கொப்பளிப்பு
வெதுவெதுப்பான உப்பு நீரில் வாயைக் கொப்பளிப்பது சளியைத் தளர்த்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் தொண்டையிலிருந்து பாக்டீரியா மற்றும் எரிச்சலை நீக்கவும் உதவுகிறது
இஞ்சி டீ
இஞ்சியில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை அழற்சியைக் குறைக்கவும், தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது
மஞ்சள் பால்
மஞ்சள் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை தொண்டை வலிக்கு ஏற்றதாகும். வெதுவெதுப்பான பால் மற்றும் தேனுடன் மஞ்சள் கலந்து குடிப்பது நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது
இலவங்கப்பட்டை டீ
இலவங்கப்பட்டையில் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளது. இவை தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. வெந்நீர் மற்றும் தேனுடன் இலவங்கப்பட்டை டீ அருந்துவது தொண்டையில் ஒரு சூடான மற்றும் இனிமையான விளைவைத் தருகிறது
எலுமிச்சை தேநீர்
தேன் மற்றும் எலுமிச்சை கொண்டு தயார் செய்யப்படும் இந்த தேநீர் தொண்டை வலிக்கு சிறந்த வீட்டு வைத்தியம் ஆகும். இதில் தேன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சளியை அகற்ற உதவுகிறது
மிளகுக்கீரை தேநீர்
மிளகுக்கீரையில் உள்ள மெந்தோல் இயற்கையான தேக்க நீக்கியாக செயல்படுவதுடன், தொண்டையை ஆற்ற உதவுகிறது. மேலும் இதில் வைரஸ் தடுப்பு மற்ரும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளும் நிறைந்துள்ளது
கெமோமில் டீ
கெமோமில் துவர்ப்பு பண்புகள், அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இவை தொண்டை அழற்சியைக் குறைக்கவும், இனிமையான விளைவுகளை அளிக்கவும் உதவுகிறது