பத்தே நிமிடங்களில் வாயு, அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெற வீட்டுவைத்தியம்!

By Kanimozhi Pannerselvam
23 Feb 2024, 08:58 IST

பூண்டு

கடாயை சூடாக்கி அதில் பூண்டு சேர்த்து சிறு தீயில் சூடாக்கவும். நல்ல வாசனை வந்த பிறகு இதனை நசுக்கியோ அல்லது நறுக்கியோ சாப்பிட வேண்டும்.

இஞ்சி

கடுகு, பூண்டு, இஞ்சி ஆகியவற்றை மருந்தாகவும் பயன்படுத்தலாம். இஞ்சி மற்றும் பூண்டை நசுக்கி தண்ணீரில் கொதிக்கவைத்து வடிக்கட்டி குடிக்கலாம்.

சீரகம்

2 கப் தண்ணீரில் 2 டீஸ்பூன் சீரகம், ஒரு சிட்டிகை உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, 7 நசுக்கிய பூண்டு பற்களை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி பருகலாம்.

கறிவேப்பிலை

சீரகம் மற்றும் சிறிதளவு கறிவேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, பின்னர் ஆற வைத்து குடிக்கவும்.

கடுகு

ஒரு பாத்திரத்தை சூடாக்கி அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்க்கவும்.

வாயு பிரச்சனை இருக்கும்போது

வாயு பிரச்சனை இருக்கும் போது மேலே குறிப்பிட்டுள்ள பானங்களில் ஏதாவது ஒன்றை அரை கிளாஸ் அளவிற்கு குடிக்கலாம்.