தீராத பல் வலியால் அவதியா? உடனே நிவாரணம் பெற பாட்டி வைத்தியம்!

By Devaki Jeganathan
29 Apr 2025, 01:31 IST

பல் சொத்தை மற்றும் ஈருகளை சுற்றியுள்ள பகுதியில் ஏற்படும் தொற்றுகளால் பல் வலி ஏற்படும். தீராத பல் வலியை குறைக்க உதவும் பாட்டி வைத்தியங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கிராம்பு

பல் வலி இருக்கும் இடத்தில், 2 கிராம்பை வைத்து சிறிது நேரம் கடித்துக்கொண்டு இருந்தால் பல்வலி குறையும். கடிக்கும்போது கிராம்புகளில் இருந்து வெளியேறும் சாறு பல் வலியை குறைக்கும்.

வெங்காயம்

பல் வலி இருக்கும் போது பச்சை வெங்காயத்தை கடித்து மென்று அதன் சாற்றை விழுங்கினால் பல் வலி குறையும். இதில் உள்ள கார தன்மை பல்லில் உள்ள கிருமிகளை அழிப்பதோடு, சொத்தைப்பல் வராமல் தடுக்கும்.

உப்பு நீர்

சிறிதளவு கல் உப்பை, வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கரைத்து, வாய் கொப்பளித்து வந்தால் பல் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். வெந்நீர் அளவான சூட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

பூண்டு

இரண்டு பல் பூண்டை எடுத்து, நசுக்கி பல் வலி உள்ள இடத்தில் வைக்கவும். இப்படி செய்வதால் பல்வலி வேகமாக குறையும். இதில் உள்ள அல்லிசின் (allicin) என்ற அமிலம் பல் வலியை குறைக்க உதவும்.

கொய்யா இலை

பல் வலியின் போது கொய்யா இலைகளை வாயில் போட்டு மெல்லுவது பல் வலியை குறைக்க உதவும். கொய்யா இலை சாறு, ஈரலின் வீக்கத்தையும் குறைக்க உதவும்.

இஞ்சி சாறு

தீராத பல்வலியால் நீங்க அவதிப்பட்டால், சிறிதளவு இஞ்சியை நசுக்கி அதன் சாற்றை சூடுப்படுத்தி வாய் கொப்பளிக்க பல் வலி சரியாகும். அதே போல பல் வலி உள்ள இடத்தில் இஞ்சி பொடியை வைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.