தொண்டை வலி பிரச்சனை
மழைக்காலத்தில் பலர் தொண்டை வலி பிரச்சனையால் அவதிப்படுவார்கள். இதை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.
மஞ்சள் மற்றும் உப்பு
தொண்டைப் புண் சரியாக மதுரம், நெல்லிக்காய், இலவங்கப்பட்டை ஆகிய கஷாயத்தை குடிக்கலாம். அதேபோல் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நீரில் கொதிக்கவிட்டு குடிக்கலாம்.
அதிமதுரம் மற்றும் தேன்
தொண்டைப்புண் குணமாக அதிமதுரத்தை தேனில் கலந்து குடிக்கலாம். அதேபோல் நெல்லிக்காய் சாறு எடுத்து 1 ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.
வெந்தய நீர்
வெந்தய நீர் அருந்தினால் தொண்டை வலி குணமாகும். அதேபோல் இஞ்சியை 1 கப் தண்ணீரில் கொதிக்க விட்டும் குடிக்கலாம்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
மழைக்காலத்தில் தொண்டை வலியை போக்க இந்த வீட்டு வைத்தியங்கள் பெருமளவு உதவியாக இருக்கும். உடல்நலம் தொடர்பான தகவல்களுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.