பெரும்பாலும் தவறான தூக்க நிலை காரணமாக காலை எழுந்ததும் கழுத்து வலி பிரச்சனை ஏற்படலாம். இந்த பிரச்சனையைப் போக்க சில வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்
கடுகு எண்ணெய்
இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த எண்ணெயைக் கொண்டு கழுத்தில் மசாஜ் செய்யும் போது வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெறலாம்
கல் உப்பு
கழுத்து வலியைப் போக்க, வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து கழுத்தில் தடவலாம். இது கழுத்து வலியை நீக்க உதவும்
புதினா எண்ணெய்
புதினா எண்ணெய் ஆனது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்வது வலியைப் போக்க உதவுகிறது
குளிர் ஃபோமெண்டேஷன்
கழுத்து வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு குளிர் ஃபோமெண்டேஷன் செய்யலாம். இதற்கு, துணி ஒன்றில் ஐஸ்கட்டியை வைத்து கழுத்தில் தடவலாம்
இஞ்சி
கழுத்து வலி குணமாக இஞ்சி மற்றும் தேன் பயன்படுத்தலாம். இஞ்சி விழுதில் தேன் சேர்த்து கழுத்தில் தடவ வேண்டும்
கழுத்து வலியை நீக்குவதற்கு இந்த வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம்