யூரிக் அமிலத்தைக் குறைக்கும் டாப் உணவுகள் இதோ!

By Gowthami Subramani
23 Jul 2024, 13:30 IST

யூரிக் அமிலம்  ரத்தத்தில் காணப்படும் ஒருவகை ரசாயனமாகும். உடலில் ப்யூரின் அளவு அதிகமாவதால் யூரிக் அமிலம் அதிகமாகும். உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும் போது சிறுநீரக நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட பல வகையான பிரச்சனைகள் ஏற்படலாம்

யூரிக் அமிலம் குறைய

உடலில் சுரக்கும் அதிகளவு யூரிக் அமிலத்தைக் குறைக்க சில உணவுகள் உதவுகிறது. இதில் யூரிக் அமிலம் குறைய உதவும் உணவுகள் சிலவற்றைக் காணலாம்

இஞ்சி

இஞ்சி அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த மூலிகையாகும். இதில் ஜிஞ்சரோல் உள்ளது. இவை வீக்கத்தைக் குறைக்கவும் யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவுகிறது

செம்பருத்தி

இதில் உள்ள டையூரிடிக் பண்புகள் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே செம்பருத்தி தேநீரை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் யூரிக் அமில அளவைக் குறைக்கலாம்

கிரீன் டீ

இது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் குறிப்பாக கேட்டசின்கள் உடலில் வீக்கத்தைக் குறைக்கவும், சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது

சிறுகாஞ்சொறி

இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கீல்வாதம் உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இவை யூரிக் அமில அளவைக் குறைக்கவும் உதவுகிறது. அன்றாட உணவில் சிறுகாஞ்சொறி மூலிகை டீயை உட்கொள்வது ஒரு சிறந்த வழியாகும்

செலரி விதைகள்

இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற உதவும் சக்திவாய்ந்த நச்சு நீக்கியாக செயல்படுகிறது. இதில் உள்ள லுடோலின், யூரிக் அமிலத்தை உற்பத்தி செய்வதற்கு காரணமான சாந்தைன் ஆக்சிடேஸ் என்ற நொதியைத் தடுக்கிறது