விக்கல் உடனடியாக நிற்க உதவும் வீட்டு வைத்தியம்!

By Karthick M
15 Apr 2025, 20:36 IST

பொதுவாக விக்கல் சிறிது தண்ணீர் குடித்த உடன் நின்று விடும். சிலருக்கு அப்படியும் நிற்காத பட்சத்தில் மேற்கொள்ள வேண்டிய வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

அதிகமாக சாப்பிடுவது, அதிக காரமான உணவுகள், மது அருந்துவது, அதிக சூடான அல்லது அதிக குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது விக்கலை ஏற்படுத்தும்.

கையால் மூக்கை மூடிக்கொண்டு தண்ணீர் குடித்தால் விக்கல் நிற்க வாய்ப்புள்ளது.

மூச்சுப்பயிற்சி விக்கலை நிறுத்த உதவும், மூச்சை 10 முதல் 20 விநாடிகள் வரை பிடித்து மீண்டும் சுவாசிக்க வேண்டும்.

எலுமிச்சை தண்ணீரில் வாயைக் கழுவுதல், சிறிது குடிப்பதும் விக்கலை நிறுத்த உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஐஸ் வாட்டரைப் பருகுதல் வாய் கொப்பளிப்பதன் மூலம் விக்கலில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.