பற்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல், முகத்தின் அழகிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தான் பற்களின் நிறம் மற்றும் அமைப்பு மாறுவதால் முழு தோற்றமும் பாதிக்கப்படலாம்
வெண்மையாக்குவது எப்படி?
மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக, பற்களில் மஞ்சள் படிவு ஏற்படலாம். இதை சில எளிமையான வீட்டு வைத்தியங்கள் மூலம் அகற்றலாம்
உப்பு மற்றும் கடுகு எண்ணெய்
இந்தக் கலவை பற்களை வெண்மையாக்க உதவுகிறது. ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெயில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து, பற்களில் மசாஜ் செய்ய வேண்டும். இந்த இரண்டு பொருட்களிலும் உள்ள இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புள், பற்களை சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது
ஆயில் புல்லிங்
ஒரு தேக்கரண்டி எண்ணெயை எடுத்து 15 முதல் 20 நிமிடங்கள் வாயில் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதற்கு எள் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம்
எலுமிச்சை, சமையல் சோடா
சமையல் சோடாவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட்டைத் தயார் செய்யலாம். இந்தப் பசையை பற்களில் லேசாகத் தேய்த்து, 2-3 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பின்னர் வாயை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும்
ஆரஞ்சு, வாழைப்பழத்தோல்
வாழைப்பழம் மற்றும் ஆரஞ்சு தோல்களில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது பற்களை வெண்மையாக்க உதவுகிறது. இந்த தோல்களில் ஒன்றை எடுத்து, பற்களில் மெதுவாக தேய்க்க வேண்டும். இதை சுமார் 2 நிமிடங்கள் தேய்த்து, பின்னர் வாயை நன்கு கழுவி, பல் துலக்க வேண்டும்
ஸ்ட்ராபெர்ரிகள்
இதில் வைட்டமின் சி மற்றும் மாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை பற்களின் கறைகளை குறைக்க உதவுகிறது. இதற்கு ஒரு பழுத்த ஸ்ட்ராபெர்ரியை மசித்து, பற்களில் தடவி சில நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு வாயைக் கழுவ வேண்டும்
குறிப்பு
இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையாகும். எனவே பல் சார்ந்த பிரச்சனைகளைத் தடுக்க பற்களின் வெண்மைக்கு இதைப் பயன்படுத்தும் முன்னதாக மருத்துவ ஆலோசனை பெறலாம்