NCBI இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பேக்கிங் சோடா பற்களின் மேற்பரப்பில் இருந்து கறைகளை அகற்ற உதவும். மேலும், ஹைட்ரஜன் பெராக்சைடு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் முகவர் ஆகும், இது பாக்டீரியாவைக் கொல்ல உதவுகிறது. ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடா மற்றும் இரண்டு தேக்கரண்டி ஹைட்ரஜன் பெராக்சைடு எடுத்து பற்கள் மீது தடவி, சில நிமிடங்கள் கழித்து சுத்தப்படுத்தவும்.
ஆயில் புல்லிங்
ஆயில் புல்லிங் என்பது இந்தியாவில் பற்களை வெண்மையாக்கும் ஒரு பாரம்பரிய முறையாகும். இது முழு வாய் பிரச்சனையையும் குணப்படுத்துவது மட்டுமல்லாமல் மஞ்சள் கறையையும் நீக்குகிறது. சூரியகாந்தி எண்ணெய், எள் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
வாழைப்பழம், ஆரஞ்சு அல்லது எலுமிச்சை தோலை எடுத்து பற்களில் மெதுவாக தேய்க்கவும். சுமார் 2 நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் வாயை நன்கு தேய்க்கவும். பிறகு பல் துலக்குங்கள். இந்த பழங்களின் தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் பற்களை வெண்மையாக்க உதவுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்
இதிலுள்ள லேசான அமிலத்தன்மை, பிளேக் மற்றும் கறைகளை அகற்றும் திறன் கொண்டது. 1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து, சுமார் 30 விநாடிகள் உங்கள் வாயில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் பின்னர் சுத்தமான நீரால் வாயை நன்றாக கொப்பளிக்கவும்.
கரி தூள்
ஆக்டிவேட்டட் சார்கோல் எனப்படும் நுந்துகள்களைக் கொண்டு கரி தூள், பற்களின் மேற்பரப்பில் ஏற்படக்கூடிய கரைகளை அகற்ற உதவுகிறது. கரி தூள் கொண்டு, 2 நிமிடங்களுக்கு உங்கள் பற்களை மெதுவாக துலக்கவும். பின்னர் தண்ணீரில் நன்கு சுத்தப்படுத்தவும். இந்த முறையை வாரத்திற்கு 1-2 முறை செயல்படுத்தவும்.