அதிகமாக சாப்பிட்ட பிறகு ஏற்படும் அஜீரணத்திலிருந்து விடுபட டிப்ஸ்

By Gowthami Subramani
29 Dec 2024, 20:36 IST

பெரும்பாலான நேரங்களில் விருந்துகள் தவிர்க்க முடியாததாகும். ஆனால், இந்த சமயங்களில் நாம் பெரும்பாலும் அஜீரணத்தை சந்திக்கலாம். இவ்வாறு அதிகம் சாப்பிட்ட பிறகு ஏற்படும் அஜீரணத்திலிருந்து விடுபட உதவும் சில குறிப்புகளைக் காணலாம்

வெதுவெதுப்பான நீர் அருந்துதல்

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது அசௌகரியத்தை எளிதாக்குவதற்கு ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாகக் கருதப்படுகிறது

பெருஞ்சீரகம் விதைகள்

உணவு உட்கொண்ட பிறகு பெருஞ்சீரகம் விதைகளை மென்று உட்கொள்வது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இஞ்சி டீ

இஞ்சி டீ செரிமானத்திற்கு ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இவை வீக்கத்தைக் குறைக்கவும், இயற்கையாகவே வயிற்றை அமைதிப்படுத்தவும் உதவுகிறது

குறைந்த கார்பனேற்றப்பட்ட பானங்கள்

சோடாக்கள் மற்றும் இன்னும் பிற கார்பனேற்றப்பட்ட பானங்களைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை வீக்கம் மற்றும் அஜீரணத்தை மேலும் மோசமாக்கலாம். இதற்கு மாற்றாக, மூலிகை டீகளைத் தேர்வு செய்யலாம்

பகுதி அளவை வரம்பிடுதல்

வயிற்றில் அதிக சுமை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு அடுத்த உணவுக்கான பகுதியைப் பார்க்க வேண்டும். எனவே சிறிய பகுதிகளை சாப்பிடலாம்