கருவளையம் நீங்க ஈசியான வீட்டு வைத்தியம்.!

By Ishvarya Gurumurthy G
19 Jan 2024, 09:04 IST

கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை நீக்க சூப்பரான வீட்டு வைத்தியம் இங்கே. பதிவில் உள்ள குறிப்புகளை பின்பற்றி பயன் பெறவும்.

வெள்ளரி

கண்களை சுற்றி கருவளையம் இருந்தால், வெள்ளரி துண்டுகளை வெட்டி கண்கள் மேல் வைக்கவும். இது குளிர்ச்சியை அளிக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கருவளையத்தை நீக்க உதவுகிறது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நன்கு அரைத்து அதனை கண்களை சுற்றி தடவவும். இதை 5 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

பால்

பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது வீக்கத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், கருவளையத்தை நீக்கி சருமத்தை ஒளிரச் செய்கிறது.

கற்றாழை

கற்றாழை ஜெல்லை கண்களுக்குக் கீழே தடவி 5-7 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இது கருவளையத்தை நீக்குகிறது.

பாதாம் எண்ணெய்

கண்களை சுற்றி பாதாம் எண்ணெயை தடவி 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின் இதனை குளிர்ந்த நீரை கொண்டு கழுவவும். இது கருவளையத்தை நீக்கும்.