நீங்கள் பொடுகு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணி பாருங்க. நல்ல முடிவு கிடைக்கும்.
வெங்காயச் சாறு
வெங்காயத்தை நன்கு அரைத்து, அதன் சாறை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். இதனை உச்சந்தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் இதனை அப்படியே விட்டு, பின் மென்மையான ஷாம்பு கொண்டு முடியை அலசவும். இது பொடுகை நீக்க உதவும்.
கற்றாழை
கற்றாழையில் இருக்கும் ஆண்டி மைக்ரோபியல் பண்புகள், பொடுகு போன்ற பூஞ்சை தொற்றுகளை தடுக்கும். இதற்கு புதிய காற்றாழையை பயன்படுத்த வேண்டும்.
லெமன்கிராஸ் ஆயில்
லெமன்கிராஸ் ஆயிலில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பொடுகு தொல்லையை அடியோடி நீக்கும்.
யூக்கலிப்டஸ் எண்ணெய்
இது உங்கள் உச்சந்தலை ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும் இது பொடுகு பிரச்னைகளை போக்குகிறது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள அழற்சி எதிப்பு பண்புகள், உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது பொடுகு தொல்லையை நீக்கும்.