சிறுநீர் பாதை தொற்றை சரி செய்யும் வீட்டு வைத்தியம்

By Gowthami Subramani
08 Aug 2024, 13:30 IST

பெண்கள் சந்திக்கும் பொதுவான பாக்டீரியா தொற்றுக்களில் ஒன்றாக சிறுநீர் பாதை தொற்றும் அமைகிறது. இதிலிருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

பாதிப்புகள்

இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பல விதமான அசௌகரியங்கள் ஏற்படலாம். குறிப்பாக, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தலாம்

அதிக தண்ணீர்

உடலில் பலவகைப் பிரச்சனைகளுக்கு தீர்வு தரக்கூடிய வகையில் தண்ணீர் உள்ளது. உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலம் தொற்று வராமல் தடுக்கவும், தொற்று வந்தவர்களுக்கு பாக்டீரியாவை

ஆன்டிபயாடிக்குகள்

சிறுநீர் பாதை தொற்று நோயால் பாதிக்கப்படும் பெண்கள் ஆன்டிபயாட்டிக்கை எடுத்துக் கொண்டால், அது 5 நாள்களில் குணமாகும். அதுவே ஆண்களுக்கு நீண்ட காலத்திற்கு தேவைப்படலாம். இந்த ஆன்டிபயாடிக்குகள் பாக்டீரியாவைத் தாக்கி அழிக்கிறது

வீட்டு முறை சிகிச்சை

UTI தொற்றுக்கு ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகள் சிறந்த தீர்வாக அமையும். எனினும், இதன் அறிகுறிகள் மற்றும் பாதிப்புகள் லேசான அளவில் இருக்கும் போது, வீட்டிலேயே சில எளிய தீர்வுகளை மேற்கொள்ளலாம்

கிரான்பெர்ரி பழங்கள்

இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றைக் குணமாக்க உதவும் பழமாகும். இந்த பழங்கள் சிறுநீர் பாதையில் பாக்டீரியா ஒட்டிக் கொள்வதைத் தடுப்பதுடன், UTI தொற்றுக்கான அபாயத்தை விரைவாகக் குறைக்கிறது

வைட்டமின் சி

சிட்ரஸ் பழங்கள் எனப்படும் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழவகைகளில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இவற்றை அதிகம் உட்கொள்வது சிறுநீர் பாதையில் தேக்கம் அடையும் பாக்டீரியாக்களை அழிப்பதற்கு உதவுகிறது

புரோபயாடிக்குகள்

புரோபயாடிக் உணவுகள் உடலுக்கு நோயெதிர்ப்புச் சக்தியை வழங்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இவை உடலில் கெட்ட பாக்டீரியாக்களை அழித்து, நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது