குளிர்காலத்தில் தீவிரமாகும் நிமோனியா. எப்படி தடுக்கலாம்.?

By Gowthami Subramani
10 Dec 2023, 20:38 IST

குளிர்காலத்தில் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக நிமோனியா உள்ளது. இதனை போதுமான சிகிச்சைகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இந்த நிமோனியா பரவலைத் தவிர்க்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்

வைட்டமின் சி

நிமோனியா பாதிப்பானது வைட்டமின் சி குறைபாட்டால் அதிகமாகலாம். ஏனெனில் வைட்டமின் சி ஆனது ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளை மேம்படுத்துகிறது. எனவே தினந்தோறும் வைட்டமின் சி உட்கொள்ளலை அதிகரிக்கலாம்

இஞ்சி

நிமோனியாவைக் குணப்படுத்த உதவும் மூலிகைகளில் இஞ்சியும் ஒன்று. இதன் அழற்சி மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிமோனியாவைக் குணப்படுத்த உதவுகிறது

காய்கறி சாறுகள்

நிமோனியா சிகிச்சைக்கு காய்கறி சாறுகள் பெரிதும் உதவுகின்றன. இவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நோய்த்தொற்றிலிருந்து உடலை பாதுகாக்கிறது

வெந்தய விதைகள்

வெந்தய விதைகள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளன. இது வீக்கம் மற்றும் நிமோனியாவின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது

தேன்

இதில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது. இது நிமோனியாவின் அறிகுறிகளான சளி, இருமல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது

ஸ்டீம் எடுப்பது

பெப்பர்மின்ட் எண்ணெய் அல்லது யூகலிப்டஸ் போன்ற அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு நீராவியை உள்ளிழுப்பதன் மூலம் நுரையீரலில் உள்ள சளியைக் குறைக்கலாம்