பருவநிலை மாற்றம் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பிரச்சினையால் அவதிப்படுவது வழக்கம். சளியால் குழந்தைகள் இரவில் மூச்சுவிட சிரமப்படுவார்கள். குழந்தைகளின் இந்த மூக்கடைப்பு பிரச்சனையை நொடியில் போக்கும் பாட்டி வைத்தியங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
கடுகு எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் கால் கப் கடுகு எண்ணெய் மற்றும் 4 கிராம்பு, 10 வெந்தய விதை, 3 பற்கள் பூண்டு ஆகியவற்றை இடித்து சேர்த்து சூடு படுத்தவும். பின்னர், இதை நன்கு ஆற விட்டு, குழந்தையின் நெஞ்சு மற்றும் மூக்கு பகுதிக்கு மசாஜ் செய்து விட நல்ல பலன் கிடைக்கும்.
மிளகு
சிறிதளவு தேனுடன் 10 மிளகு சேர்த்து சுமார் 8 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும். பின்னர், ஒரு கடாயில் இந்த மிளகினை சேர்த்து வறுத்து குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்க மூக்கடைப்பு பிரச்சனை நீங்கும்.
சுக்கு டீ
சிறிதளவு இஞ்சி, கொத்தமல்லி விதைகள் மற்றும் கருப்பட்டி சேர்த்து தயார் செய்யப்படும் சுக்கு டீ மூக்கடைப்பு பிரச்சனைக்கு சிறந்த தீர்வு.
பூண்டு கசாயம்
ஒரு கப் நீரில் 3 பற்கள் பூண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும். பின்னர் இதை வடிக்கட்டி மிதமான சூட்டில் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நன்கு சுத்தம் செய்துக்கொள்ளவும். பின்னர், அப்படியே பச்சையாக சாப்பிட மூக்கடைப்பு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தூதுவேளை ரசம்
குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பு பிரச்சனை நீங்க, 15 நாட்களுக்கு ஒரு முறை தூதுவேளை இலையை பயன்படுத்தி ரசம் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் சளி மற்றும் மூக்கடைப்பி பிரச்சினை நீங்கும்.
தேங்காய் எண்ணெய்
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் 1 கற்புரம் சேர்த்து சூடு செய்யவும். பின்னர் இந்த எண்ணெய்யை நன்கு ஆறவிட்டு குழந்தையின் மார்பு பகுதியில் மசாஜ் செய்து விட நல்ல பலன் கிடைக்கும்.