முதுகு வலி வீட்டு வைத்தியம்
கீழ் முதுகு வலி பொதுவாக வயதான காலத்தில் ஏற்படும் என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் இளம்தலைமுறைக்கே ஏற்படுகிறது. ஒரே இடத்தில் அமருவது, அதிகம் இருசக்கர வாகனம் ஓட்டுவது போன்ற சூழ்நிலையில் இது ஏற்படுகிறது. இதற்கான வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.
நிபுணர்கள் கருத்து
தவறான நிலையில் அமருவதை தவிர உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் இல்லாததால் முதுகு வலி ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். சரியான மருத்துவ ஆலோசனை தேவை.
துளசி
கீழ் முதுகு வலி குணமாக துளசி இலைகளை பயன்படுத்தவும். துளசி இலைகளை வேகவைத்து அதன் தண்ணீரை குடிக்கவும்.
பூண்டு
முதுகு வலி குணமாக பூண்டை சாப்பிடுங்கள். இதற்கு பூண்டு பற்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். மேலும் பூண்டு எண்ணெய் தடவி வந்தால் வலி குணமாகும்.
இஞ்சி
கீழ் முதுகு வலி ஏற்பட்டால் இஞ்சியை பயன்படுத்தலாம். இஞ்சித் துண்டுகளை தண்ணீரில் கலந்து அது ஆறியதும். அதில் தேன் சேர்த்து குடிக்கவும்.
முழுமையாக படித்ததற்கு நன்றி
அதேபோல் பால் உள்ளிட்டவற்றை குடிக்கலாம். இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றலாம். இருப்பினும் தீவிர பிரச்சனைகளை சந்திக்கும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகலாம்.