குளிர்காலத்தில் உடல் பராமரிப்புடன் சருமம் மற்றும் உதடுகளை பராமரிப்பதும் அவசியமாகும். குளிர்காலத்தில் உதடு வெடிப்பு ஏற்படுவது சாதாரணமாக இருப்பினும், அவற்றைத் தவிர்க்க இந்த வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தலாம்
உதடு வெடிப்புக்குக் காரணம்
உதடு வெடிப்புக்கான முக்கிய காரணம் உமிழ்நீரில் உள்ள ஈஸ்ட் தொற்றே ஆகும். இந்த தொற்று உதடுகளை உரிக்கச் செய்து உதடு வெடிப்பை ஏற்படுத்துகிறது
சமையல் சோடா
தோல் தொடர்பான பிரச்சனைகளை நீக்க பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். இதற்கு பேக்கிங் சோடாவில் இயற்கையான ஆன்டி செப்டிக் பண்புகள் உள்ளன. இவை சருமத்தில் உள்ள பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவுகிறது
தேன்
உதடுகளின் வெடிப்பைப் போக்க, தேன் உதவுகிறது. இதற்கு தேனில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகளே காரணம் ஆகும். உதட்டில் தேனை தடவி 10 நிமிடம் வைத்திருக்க உதடு வெடிப்பு குணமாகும்
தேயிலை மரம் மற்றும் லாவண்டர் எண்ணெய்
உதடு வெடிப்பைக் குணப்படுத்த தேயிலை மரம் மற்றும் லாவண்டர் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இந்த இரு எண்ணெய்களிலும் உள்ள பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் உதடுகளில் உள்ள பூஞ்சையை அகற்ற உதவுகிறது. இது சரும வறட்சியை நீக்குகிறது
பூண்டு
பூண்டில் பூஞ்சை எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இவை உதடு வெடிப்பைக் குணப்படுத்த உதவுகிறது
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை உதடுகளுக்குத் தடவி வர வெடிப்பு பிரச்சனைகளை நீக்கலாம். தேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு அமிலங்கள் உதடுகளை மென்மையாக்க உதவுகிறது
உதடு வெடிப்புகளைக் குணப்படுத்த இந்த வீட்டு வைத்திய முறைகளைக் கையாளலாம்