நீங்கள் வறட்டு இருமலுடன் போராடி வருகிறீர்களா? அப்போ இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும்.
இஞ்சி
இஞ்சியை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி குடிக்கவும். இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வறட்டு இருமலிடமிருந்து நிவாரணம் தரும்.
உப்பு நீரில் கொப்பளித்தல்
நீங்கள் வறட்டு இருமலால் அவதிப்பட்டால், கதகதப்பான நீரில் உப்பு சேர்த்து கலந்து, அதனை கொண்டு வாய் கொப்பளிக்கவும். இது தொண்டை பிரச்னை மற்றும் இருமலை நீக்கும்.
புதினா டீ
புதினா டீ குடித்தால் சளி இருமல் போன்ற பிரச்னைகள் தீரும். மேலும் இது தொண்டை சார்ந்த பிரச்னைகளை தீர்க்கும்.
மஞ்சள் பால்
இருமல் பிரச்னை என்று வரும்போது, அதற்கு மஞ்சள் பால் சிறந்த தேர்வாக இருக்கும். மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளே இதற்கு காரணம்.
அதிமதுரம்
வறட்டு இருமலுக்கு அதிமதுரம் நல்ல மருந்தாகும். இது உங்கள் தொண்டைக்கு இதமான தன்மையை வழங்கும்.