உங்களுக்கு செரிமான பிரச்னை இருக்கா? இந்த வீட்டு வைத்தியத்த ட்ரை பண்ணி பாருங்க. செரிமான பிரச்னை நீங்கும்.
இஞ்சி
இஞ்சி வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட் பண்புகள் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இதற்கு இஞ்சி டீ குடிக்கலாம்.
தயிர்
உணவுடன் கண்டிப்பாக தயிர் சாப்பிடுங்கள். தயிர் உணவை விரைவாக ஜீரணிக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி இதனை உட்கொள்வதால் வயிறு குளிர்ச்சியாக இருக்கும்.
பெருங்காயம்
பெருங்காயத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உணவை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் இதை சாப்பிடுவதால் வாயுவும் வெளியேறும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது உணவை ஜீரணிக்க உதவுவதோடு, செரிமான அமைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது.
தண்ணீர்
குறைந்த அளவு தண்ணீர் குடிப்பதால், வாயு மற்றும் அஜீரண பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, ஒரு நாளைக்கு 5 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
நடைபயிற்சி முக்கியம்
பெரும்பாலும் மக்கள் உணவு உண்ட பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்வதில்லை. இதனால் அவர்கள் வாயு மற்றும் மலச்சிக்கலால் பாதிக்கப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், சாப்பிட்ட பிறகு 30 நிமிடங்கள் நடக்க வேண்டும்.