ஒழுங்கற்ற மாதவிடாயை சீராக்க இந்த 5 பானங்கள குடிங்க!

By Kanimozhi Pannerselvam
27 Mar 2024, 06:39 IST

எள்+ வெல்லம்

1 டீஸ்பூன் எள் (வெள்ளை அல்லது கருப்பு), 1 டீஸ்பூன் மஞ்சள், 1 டீஸ்பூன் உலர் இஞ்சி தூள் ஆகியவற்றை எடுத்து 1 கிளாஸ் தண்ணீரில் பாதியாகும் வரை கொதிக்கவும். பின்னர் அதில் 1 டீஸ்பூன் வெல்லம் சேர்த்து சூடாக இருக்கும் போது பருகவும். மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இந்த பானத்தை பருக வேண்டும்.

திராட்சையுடன் கொத்தமல்லி + பெருஞ்சீரகம்

1 டீஸ்பூன் கொத்தமல்லி, பெருஞ்சீரகம் மற்றும் ஊறவைத்த திராட்சையை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து, 5 நிமிடம் கொதிக்கவைத்து, வடிகட்டி, ஆறிய பிறகு குடிக்க வேண்டும்.

இஞ்சி சாறு

ஒரு கிளாஸ் சூடான இஞ்சி டீயுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ஒரு துளி தேன் சேர்த்து காலை அல்லது மாலை வெறும் வயிற்றில் குடிப்பது சீரான மாதவிடாயை ஊக்குவிக்கும். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. இது கருப்பை தசைகளை சுருக்கவும், ஹார்மோன் சமநிலையை எளிதாக்கவும் உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரை குடிப்பது, பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் மற்றும் ஹார்மோன்களை சீராக்க உதவுகிறது.

மஞ்சள் பால்

மஞ்சளில் உள்ள ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும், ஹார்மோன் சமநிலையை சரிசெய்யவும் உதவுகிறது. ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள் பால் மற்றும் தேன் கலந்து சில வாரங்கள் தொடர்ந்து குடிக்க வேண்டும்.