அதிக சர்க்கரை அளவையும் அசால்ட்டா கட்டுப்படுத்த உதவும் வீட்டு குறிப்புகள்!

By Kanimozhi Pannerselvam
28 Mar 2024, 12:57 IST

வேப்பம்பூ பொடி

வேப்ப இலைகளில் ஃபிளாவனாய்டுகள், ட்ரைடர்பெனாய்டுகள், ஆன்டிவைரல் பொருட்கள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உலர்ந்த வேப்பம்பூ இலைகளை அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும். இந்த பொடியை தினமும் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

பாகற்காய் சாறு

பாகற்காயில் உள்ள இரண்டு முக்கிய பொருட்களான காரடைன் மற்றும் மோமோர்டிசின் ஆகியவை இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும் திறன் கொண்டவை. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு குடிக்கவும்.

நாவல் பழம்

இரத்தச் சர்க்கரைக் குறைவு பண்புகளைக் கொண்டுள்ளது. இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. நாவல் பழ விதைகளை அரைத்து, ஒரு டீஸ்பூன் பொடியை சிறிது தண்ணீரில் கலந்து தினமும் காலையில் குடிக்கவும்.

இஞ்சி

இஞ்சியை தொடர்ந்து உட்கொள்வது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இது இன்சுலினை சமன் செய்கிறது. ஒரு கப் தண்ணீர், ஒரு இன்ச் அளவு இஞ்சியை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். ஐந்து நிமிடம் கொதித்த, இந்த கஷாயத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கவும்.

வெந்தயப் பொடி

வெந்தயம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. குளுக்கோஸ் சகிப்புத்தன்மையை அதிகரிக்கவும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், இன்சுலின் வெளியீட்டைத் தூண்டவும் உதவுகிறது. இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிக்கவும்.