வாழைப்பழத்தோலை இரவில் படுக்கும் முன் மருக்கள் மீது தடவவும். காலையில் எழுந்து வெற்று நீரில் கழுவவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சில நாட்களில் மருக்கள் மறைந்துவிடும்.
முகச்சுருக்கம்
வாழைப்பழத் தோலை மசித்து, முட்டையின் மஞ்சள் கருவுடன் கலக்கவும். இதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இது சுருக்கங்களை நீக்கும்.
கண்களை பராமரிக்கும்
வாழைப்பழத்தோலை கண்களில் சிறிது நேரம் வைக்கவும். இதைச் செய்வதன் மூலம், புற ஊதா கதிர்களில் இருந்து கண்களைப் பாதுகாக்கிறது.