ரத்த சர்க்கரையை குறைக்க எலுமிச்சையை இப்படி பயன்படுத்திப் பாருங்க!

By Kanimozhi Pannerselvam
08 Dec 2023, 11:30 IST

எலுமிச்சை எப்படி சர்க்கரையை குறைக்கிறது?

எலுமிச்சை வைட்டமின் சி, நார்ச்சத்து, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் மற்றும் அதன் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் இரத்த சர்க்கரை அளவை கணிசமாகக் குறைக்க உதவுகிறது. மேலும், எலுமிச்சையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.

எலுமிச்சை சாறு

உங்கள் உணவில் சில துளிகள் புதிய எலுமிச்சை சாற்றை சேர்ப்பது சிறப்பான வழியாகும். அரிசி முதல் பாஸ்தா வரை எந்த உணவிலும் சில துளிகள் எலுமிச்சை சேர்க்கலாம். இது உணவுக்கு ஒரு நல்ல சுவையையும் நறுமணத்தையும் தருகிறது.

எலுமிச்சை ஜூஸ்

வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறு குடிப்பது, புத்துணர்ச்சி அளிக்கிறது. வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், சர்க்கரை அல்லது பிற இனிப்பு சுவையூட்டக்கூடிய பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

டிடாக்ஸ் வாட்டர்

எலுமிச்சை துண்டுகளுடன் உங்களுக்கு பிடித்தமான பழங்கள் அல்லது காய்கறி துண்டுகளை கலந்து டிடாக்ஸ் பானத்தை தயார்படுத்தலாம். இதனை நாள் முழுவதும் பருகுவதால் உடலிலுள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, சர்க்கரை அளவையும் குறைக்கும்.

சாலட்

எலுமிச்சை சாறு சேர்க்க மற்றொரு ஆரோக்கியமான வழி உங்கள் சாலட்டில் உள்ளது. இது சாலட்டின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்புக்கான சக்திவாய்ந்த மூலப்பொருளாகவும் செயல்படுகிறது. உங்கள் சாலட்டில் போதுமான அளவு எலுமிச்சை சாற்றை பிழியவும், ஆனால் அதிகப்படியான எலுமிச்சை அமிலத்தன்மையை ஏற்படுத்தும், எனவே அதை மிதமான அளவில் உட்கொள்ளுங்கள்.