டெங்கு எதிர்த்துப் போராட இந்த ட்ரிங்ஸ் குடிங்க

By Gowthami Subramani
25 Jul 2024, 17:30 IST

டெங்குவை எதிர்த்துப் போராட உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்க வேண்டும். மேலும் டெங்கு நோயாளிகள் தங்களை நீரேற்றமாக வைத்திருப்பதும் அவசியமாகும். இதில் டெங்கு குணமாக உதவும் பானங்கள் சிலவற்றைக் காணலாம்

பாகற்காய் சாறு

டெங்கு வைரஸின் பெருக்கத்திற்கு எதிராக தடுப்பு நடவடிக்கையை பாகற்காய் சாறு தருகிறது. இதில் உள்ள மோமோர்டிசின் தனித்துவமான கசப்பு சுவை கொண்டது. மேலும் இதில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது

துளசி நீர்

பாரம்பரியமாக டெங்கு காய்ச்சலை தடுக்க துளசி இலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும், விரைவான மீட்புக்கும் உதவுகிறது. புதிய துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து குடிக்கலாம்

பப்பாளி இலைச்சாறு

டெங்கு நோயாளிகளின் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஒரு சிறந்த தீர்வாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. சில பப்பாளி இலைகளை எடுத்து நசுக்கி சாறு பிழிந்து, அதை ஒரு நாளைக்கு இரு முறை சிறிதளவு உட்கொள்ளலாம்

ஜிலோய் சாறு

இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் பானமாகும். இதற்கு ஒரு கிலோய் செடியின் இரண்டு சிறிய தண்டுகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பாக்கிக் குடிக்கலாம்

புதிய கொய்யா சாறு

கொய்யா சாற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. எனினும், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகளுக்குப் பதில், புதிய கொய்யா சாறு தயாரித்து அருந்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்

குறிப்பு

இந்த பானங்கள் டெங்குவை எதிர்த்துப் போராட உதவும் பானமாகும். எனினும் புதிய உணவுகளை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது