நம்மில் பலர் இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்போம். இதற்க்கு பல காரணங்கள் இருக்கலாம். இரவில் நிம்மதியாக தூங்க நீங்கள் குடிக்க வேண்டிய சில பானங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பால்
பாலில் அதிக அளவு டிரிப்டோபான் அமினோ அமிலம் உள்ளது. இது உடலுக்குள் சென்றதும், தூக்கத்திற்கு உதவும் ஹார்மோனான மெலடோனினாக உருமாறி இரவில் நல்ல தூக்கத்தை தரும்.
கிரீன் டீ
கிரீன் டீ உடல் எடையை குறைக்க மிகவும் நல்ல என நமக்கு தெரியும். இதை இரவு தூங்க செல்லும் முன் குடித்தால் நல்ல தூக்கம் வரும். இதில் உள்ள தியானைன் அமிலம் செரிமானத்திற்கு உதவுவதுடன், நல்ல தூக்கத்தையும் தரும்.
எலுமிச்சை - புதினா டீ
எலுமிச்சை சாறு மற்றும் புதினாவால் தயாரிக்கப்படும் டீயில் காஃபின் இல்லாததால், இரவில் நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும். மேலும், இது உங்கள் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
இளநீர்
இரவில் இளநீர் குடித்தால் ஜலதோஷம் பிடிக்கும் என நம்மில் பலர் நினைப்போம். ஆனால், இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் தசைகளை தளர்த்தி நிம்மதியாக தூங்க உதவும்.
வாழைப்பழ ஸ்மூத்தி
வாழைப்பழம் இயற்கையாவே ஆரோக்கியம் நிறைந்தது. இதில், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது இரவில் நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
திராட்சை ஜூஸ்
திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரவில் உங்களுக்கு நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும். இதை படுக்கைக்கு செல்லும் முன் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளரி ஜூஸ்
வெள்ளரிகாய் உடலுக்கு மிகவும் நல்லது. இதனுடன், புதினா சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் இரவில் நிம்மதியான தூக்கம் வரும். இதை படுக்கைக்கு செல்லும் முன் குடிக்கவும். இதில் உள்ள பைபர், நல்ல செரிமானத்திற்கு உதவும்.