தினமும் 2 சொட்டு நெய்யை மூக்கில் விட்டால் இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
12 Feb 2024, 15:38 IST

நெய் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல, இந்து மதத்திலும் புனிதமாக கருதப்படுகிறது. பெரும்பாலும் நாம் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிடுவோம். ஆனால், நெய்யை மூக்கில் விடுவது நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? அதன் பயன்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

நெய்யின் பண்புகள்

நெய்யில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. எனவே, மூக்கில் நெய் விடுவதால் கழுத்துக்கு மேலே உள்ள அனைத்து உள் உறுப்புகளையும் நச்சு நீக்க உதம்.

அழுக்கு நீங்கும்

மூக்கில் 2 சொட்டு நெய் விடுவதால் பல வகையான நுண்ணுயிரிகள் நீங்கும். அதாவது, வெளியே உள்ள தூசு மற்றும் அழுக்கு தொண்டை மற்றும் சுவாச மண்டலத்தை அடையாது.

மாசுபாட்டிலிருந்து பாதுகாக்க

உங்கள் நாசியின் உள் சுவரில் நெய்யை தடவினால், காற்றில் உள்ள மாசுக்கள் உள்ளே செல்லாமல் தடுக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

2 சொட்டு பசு நெய்யை மூக்கில் வைப்பது மிகவும் நன்மை பயக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

மூக்கு & தொண்டை ஆரோக்கியம்

பசுவின் தேசி நெய்யை 2 சொட்டு மூக்கில் விட்டால், மூக்கை உள்ளே இருந்து சுத்தம் செய்ய உதவுகிறது. இது தொண்டையைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

மூளைக்கு நல்லது

ஆயுர்வேதத்தில், மூக்கு மூளைக்கான பாதையாக கருதப்படுகிறது. இந்சூழ்நிலையில், மூக்கில் நெய் வைப்பது மூளை ஆரோக்கியமாக இருக்க உதவும்.

ஏன் மூக்கில் நெய் போட வேண்டும்

இதன் மூலம் நரம்பு மண்டலத்தில் புதிய உயிர் சக்தியை செலுத்துகிறோம். இது மூளையின் செயல் திறனை அதிகரிக்க உதவுகிறது.