சம்மரில் உடல் துர்நாற்றத்தை நீக்க இந்த ஆயில் யூஸ் பண்ணுங்க

By Gowthami Subramani
31 Mar 2025, 17:53 IST

கோடைக்காலத்தில் வியர்வை அதிகமாவதால், உடலிலிருந்து துர்நாற்றம் வீசும் அசௌகரியம் ஏற்படும். இந்த துர்நாற்றத்தைப் போக்குவதற்கு சில அத்தியாவசிய எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். இதில் உடல் துர்நாற்றத்தை நீக்க உதவும் அத்தியாவசிய எண்ணெய்களைக் காணலாம்

லாவெண்டர் எண்ணெய்

இது ஒரு அமைதியான வாசனையைத் தருவது மட்டுமல்லாமல், பாக்டீரியாவுக்கு எதிராகவும் செயல்படவும் உதவுகிறது. இது உடல் நாற்றத்தை மறைப்பதில்லை. அந்த துர்நாற்றம் வீசும் கிருமிகள் வளர்வதைத் தடுக்கிறது

தேயிலை மர எண்ணெய்

இது துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டீ ட்ரீ ஆயில் நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும், இது உடல் நாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறது

மிளகுக்கீரை எண்ணெய்

இந்த எண்ணெய் குளிர்ச்சி உணர்வு மிக்கதாகும். இது வியர்வை மற்றும் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் வாசனை மிகவும் புத்துணர்ச்சியூட்டுகிறது

யூகலிப்டஸ் எண்ணெய்

இது துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதற்கு உதவுகிறது. இது ஒரு சுத்தமான மற்றும் புதிய நறுமணத்தை அளிக்கக் கூடியதாகும்

எலுமிச்சை எண்ணெய்

இது புத்துணர்ச்சியைத் தரக்கூடிய எண்ணெயாகும். சிறந்த வாசனை உணர்வைத் தருவது மட்டுமல்லாமல், உடல் நாற்றங்களை நீக்க உதவுகிறது