அதிகாலை வேகமாக எழுவது ஆரோக்கியமான வாழ்க்கை மிக முக்கியம். இதனால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
நேரம் திட்டமிடுதல்
திட்டமிட்ட நேரத்தை விட முன்னதாக எழுவதால், ஏராளமான செயல்பாடுகளில் ஈடுபடலாம். அன்றைய பணியை திட்டமிட்டு செய்யலாம்.
எடை மேலாண்மை
அதிக நேரம் தூங்குவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதே சமயம் போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பதும், உடல் எடையைப் பாதிக்கலாம்.
இரவு நேரத்தில் தூங்கலாம்
அதிகாலை நேரத்திற்கு எழுவதால் இரவு வேகமாகவே தூக்கம் வரும். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.
சமச்சீர் உணவு
காலை உணவு என்பது ஒரு நாளின் முக்கியமான உணவாகும். சரியான நேரத்தில் காலை உணவை உண்பது அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.