குளிர்காலத்தில் நல்லெண்ணெய் உபயோகிப்பது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இந்த எண்ணெயை உணவுப் பொருளாக எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, உடலில் பூசுவதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெறலாம்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த
இரவு தூங்கும் முன் நல்லெண்ணெய் தடவி தூங்குவது இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதற்கு இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளே காரணமாகும்
நீரிழிவு நோயாளிகளுக்கு
இந்த எண்ணெயில் உள்ள மக்னீசியம் சத்துக்கள், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் குறைப்பதுடன் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது
எலும்புகள் வலுவடைய
நல்லெண்ணெயை உடலில் தடவுவதன் மூலம் எலும்புகள் வலுவடைவதைக் காணலாம். இதற்கு இதில் உள்ள இரும்பு, கால்சியம் மற்றும் துத்தநாகம் போன்றவையே காரணமாகும். இவை எலும்புகளை பலப்படுத்துவதுடன், மூட்டு வலியைக் குறைக்கவும் உதவுகிறது
மனச்சோர்வை நீக்க
இந்த எண்ணெயில் உள்ள டைரோசின் என்ற அமினோ அமிலம் மனச்சோர்வை நீக்க உதவுகிறது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மன ஆரோக்கியத்தைப் பெறலாம்
இரத்த சோகை பிரச்சனைக்கு
இதில் உள்ள இரும்புச்சத்துக்கள் உடலில் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாட்டை நீக்கி, இரத்த சோகை பிரச்சனையைத் தடுக்க உதவுகிறது
இரவு தூங்குவதற்கு முன் நல்லெண்ணெயை உடலில் தடவி வருவதன் மூலம் பல்வேறு பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெறலாம்