நீங்கள் இதய நோயாள் அவதிப்படுகிறீர்களா? அப்போ உணவு கட்டுப்பாடு அவசியம். நீங்கள் எந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.
காய் மற்றும் பழம்
தினமும் 6 கப் காய் மற்றும் பழம் சாப்பிடவும். இந்த கலவையில் எது அதிகமகாக இருந்தாலும் சரி. ஆனால் ஒரு நாளைக்கு 6 கப் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
பால் பொருட்கள்
தினமுன் இரண்டு கப் பால் பொருட்கள் சாப்பிடலாம். பனீர், சீஸ், பால் போன்றவற்றை அளவோடு எடுத்துக்கொள்ளவும்.
பருப்பு வகை
உங்கள் உணவில் ஒரு பங்காக பருப்பு வகைகளை இணைத்துக்கொள்ளவும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நட்ஸ்
தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிடவும். இதில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம், பொட்டாசியம், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துகள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
மீன்
வாரம் இரண்டு முறை மீன் சாப்பிடுவதை உறுதி செய்யவும். குறிப்பாக சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்ற ஒமேகா கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடவும்.