ஹை பிபியைக் குறைக்கும் சூப்பரான உலர் பழங்கள்

By Gowthami Subramani
15 Jul 2024, 17:30 IST

உயர் இரத்த அழுத்தத்திற்கு கட்டுக்குள் வைத்திருக்க உலர் பழங்கள் உதவுகிறது. இதில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் உலர் பழங்கள் சிலவற்றைக் காணலாம்

பாதாம்

பாதாமில் மக்னீசியம், நார்ச்சத்துக்கள், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு போன்றவை நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது

வேர்க்கடலை

இதில் புரதச்ச்சத்து நிறைந்துள்ளது. இது தசைகளை வலுப்படுத்துவதுடன், பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் உள்ள நியாசின், மாங்கனீசு, துத்தநாகம் போன்றவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது

உலர்ந்த பிளம்ஸ்

இது இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவும் உலர் பழங்களில் ஒன்றாகும். வெறும் வயிற்றில் உலர் பிளம்ஸ் உட்கொள்வது இரத்த அழுத்த அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

திராட்சை

திராட்சையில் பொட்டாசியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்தவும், இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது

முந்திரி

இது இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கும் சிறந்த உலர் பழமாகும். இதன் அதிக மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளடக்கம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

வால்நட்

இதில் கால்சியம், வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இவை உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

பிஸ்தா

இது சுவையுடன் கூடிய ஆரோக்கியத்தையும் தருகிறது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் பிஸ்தாவை சாப்பிடுவதன் மூலம் சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்கக முடியும்

பேரீச்சம்பழம்

பேரீச்சம்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது