நாம் தினமும் வழக்கமாக செய்யும் சில விஷயங்கள் நம் இதய ஆரோக்கியத்த்தை பாதிக்கும். அந்த வகையில், இதய ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.
தூக்கமின்மை
ஒருவர் நாள் ஒன்றுக்கு சுமார் 7 - 8 மணி நேரம் உடலுக்கு ஓய்வு வழங்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிகவும் முக்கியம். தூக்கத்தினை தவிர்ப்பது மற்றும் தள்ளிப்போடுவது இதய ஆரோக்கியத்தை முழுமையாக பாதிக்கும்.
மது பழக்கம்
அளவுக்கு அதிகமான மது பழக்கத்தால் உடலில் அதிகமாக கொழுப்பு தேங்க வழிவகுக்க்கும். இதனால், இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பால் இதயத்திற்கு இரத்தம் செல்வது தடைபடும். இதனால், இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
துரித உணவுகள்
சாலையோரம் கிடைக்கும் சுவையான துரித உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்த்திற்கு நல்லது அல்ல. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதுடன், இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
மன அழுத்தம்
மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் போன்ற பிரச்சனையின் போது நம் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் இதய ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்.
புகை பழக்கம்
புகையிலை உள்ளிட்ட பிற போதை பொருட்கள் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும். போதை பழக்கத்தால் இதய செயலிழப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும்.
உடல் பருமன்
உடல் பருமன் இதய ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் ஒரு பிரச்சினை. உடல் பருமனால், எலும்புகள் மெலிவுறுதல், மூட்டு திசு வளர்தல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும். எனவே, உடல் பருமனை பாதுகாப்பது நல்லது.
அதிக உப்பு
இரத்த அழுத்தம் மற்றும் இதய செயலிழப்பு இவை இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இரத்த அழுத்த பிரச்சனையை தவிர்க்க உணவில் உப்பை குறைப்பது மிகவும் நல்லது.
பல் துலக்க மறப்பது
வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை கவனிக்காமல் இருப்பதும் நம் இதயத்தை பாதிக்கும். அதாதவது, கிருமிகள் நிறைந்த பற்களை பயன்படுத்தி உண்ணும் உணவுகள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்.