இதய நோயை அதிகரிக்கும் காரணிகள் என்ன தெரியுமா?

By Gowthami Subramani
04 Sep 2024, 09:04 IST

இதய நோய் உலகளவில் பலரும் பாதிக்கப்படும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். எனவே இதய ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது அவசியம். இதில் இதய நோய்க்கான ஆபத்து காரணிகள் சிலவற்றைக் காணலாம்

உடல் பருமன்

உடல் எடை அதிகமாக இருப்பது தமனிகளைச் சுற்றி கொழுப்பு படிவதை ஏற்படுத்துகிறது. இது உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் அதிக கொழுப்பு போன்ற நிலைமைகளை உருவாக்குகிறது. இவை அனைத்துமே இதயம் தொடர்பான பிரச்சனைகளை அதிகரிப்பதாகும்

அதிக உப்பு உட்கொள்ளல்

அதிகளவிலான உப்பு உட்கொள்ளல் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்குகிறது. இவை உடலில் தண்ணீரைத் தக்கவைத்து, இதயம் மற்றும் இரத்த நாளங்களில் கூடுதல் அழுத்தத்தை இதய நோய்க்கு வழிவகுக்கிறது

ஒழுங்கற்ற தூக்கம்

சரியாக தூங்காமல் இருப்பது இதய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம். ஏனெனில், வீக்கம் மற்றும் இரத்த அழுத்த அளவுகள் உள்ளிட்ட உடல் செயல்பாடுகளை சீராக்க சரியான தூக்கம் அவசியமாகும்

வயது

வயதாகும் போது, இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது. ஏனெனில், காலப்போக்கில் தமனிகள் சுருங்கவும், விறைப்பாகவும் மாறுகிறது. இது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கலாம். இது இதய நோய்க்கு பங்களிக்கிறது

உடல் செயல்பாடு இல்லாமை

உடல் செயல்பாடு சீரான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதய தசையை மேம்படுத்துகிறது. இவை ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. இவை அனைத்தும் இதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது

மன அழுத்தம்

நாள்பட்ட மன அழுத்தம் கார்டிசோலின் அளவை அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. இவை இதய நோய் அபாயத்தை மேலும் அதிகரிக்கலாம்

புகைபிடித்தல் & மது அருந்துதல்

புகைபிடித்தல், மதுபானம் இரண்டும் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும். புகைபிடிப்பது இரத்த நாளங்களை சேதப்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. மேலும் ஆக்ஸிஜன் அளவைக் குறைக்கிறது.