உணவில் பல்வேறு விதைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கலாம். இதில் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும் விதைகள் சிலவற்றைக் காணலாம்
ஆளிவிதைகள்
ஆளிவிதைகளில் ஆல்ஃபாலினோலெனிக் அமிலம் நிறைந்துள்ளது. இது ஒரு வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் ஆகும். இது குறைந்த அளவு எல்டிஎல் கொழுப்புடன் தொடர்புடையதாகும்
எள் விதைகள்
எள் விதைகளில் லிக்னான்கள், ஆக்ஸிஜனேற்ற மற்றும் கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்ட தாவர கலவைகள் உள்ளன
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதைகள் பைட்டோஸ்டெரால்களின் நல்ல மூலமாகும். இது செரிமான மண்டலத்தில் உறிஞ்சப்படுவதற்கு கொழுப்பை எதிர்த்துப் போட்டியிடுகிறது. இவை எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது
பூசணி விதைகள்
பூசணி விதைகளில் அதிகளவு மக்னீசியம் நிறைந்துள்ளது. இவை இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது
சியா விதைகள்
இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இவை எல்டிஎல் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது