இதயம் ஸ்ட்ராங்கா இருக்க இந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்க

By Gowthami Subramani
05 Mar 2025, 20:14 IST

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஒமேகா-3 ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளைக் காணலாம்

வால்நட்ஸ்

இது ஒரு சிறந்த சிற்றுண்டி மட்டுமல்லாமல், ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ALA) ஒமேகா-3 களும் உள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது

ஆளி விதைகள்

இந்த விதைகள் ஆல்பா-லினோலெனிக் அமிலம் ஒமேகா-3 கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இவை நல்ல செரிமானம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

சியா விதைகள்

இது தாவர அடிப்படையிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்ததாகும். இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது

சோயாபீன்ஸ்

டோஃபு, சோயாபீன்ஸ் மற்றும் சோயா பால் போன்றவை ALA ஒமேகா-3 களின் சிறந்த ஆதாரங்களாகும். அதே சமயம், இவை புரதம் நிறைந்தவையாகும்

கொழுப்பு நிறைந்த மீன்

சால்மன், மத்தி, டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்றவை ஈகோசாபென்டெனோயிக் அமிலம் (EPA) மற்றும் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் (DHA) போன்றவற்றால் நிறைந்ததாகும். இந்த இரண்டு சக்திவாய்ந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது