இரத்த அழுத்தத்தை உடனடியாக குறைக்கும் சூப்பர் வழிகள் இதோ

By Gowthami Subramani
19 Nov 2024, 18:05 IST

உயர் இரத்த அழுத்தம் என்பது இரத்தத்தை தமனி சுவர்களுக்கு எதிராக செலுத்தி, இரத்த நாளங்களை சேதப்படுத்துவதாகும். இது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். எனவே இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகும்

எடையைக் குறைப்பது

உடல் பருமன் அதிகமாக இருக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே எடையைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்

உடற்பயிற்சி செய்வது

இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்த 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்

ஆரோக்கியமான உணவு

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் குறைந்த கொழுப்பு நிறைந்த பால் போன்ற அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது

உப்பு உட்கொள்வதைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், நாள்பட்ட இதய நோய்களைக் கட்டுப்படுத்தவும் முடியும்

புகைபிடிப்பதைத் தவிர்ப்பது

புகைபிடித்தல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம். எனவே உயர் இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க புகைபிடித்தலைத் தவிர்க்க வேண்டும். இவை இதய நோய் அபாயத்தைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது