இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவது முதல் சரியான தசை செயல்பாட்டை ஆதரிப்பது வரை பல்வேறு செயல்பாடுகளுக்கு மக்னீசியம் உதவுகிறது. இதில் இதய ஆரோக்கியத்திற்கு உதவும் மக்னீசியம் நிறைந்த உணவுகள் சிலவற்றைக் காணலாம்
முழு தானியங்கள்
பழுப்பு அரிசி, குயினோவா, ஓட்ஸ், பார்லி மற்றும் முழு கோதுமை போன்ற முழு தானியங்கள் நிறைந்த உணவுகள் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்ததாகும். இதன் நார்ச்சத்துக்கள், கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையை சீராக்கவும் உதவுகிறது
பச்சை இலை காய்கறிகள்
பச்சை காய்கறிகளில் குறிப்பாக கீரை, முட்டைக்கோஸ் போன்றவை மெக்னீசியத்தின் சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரங்களில் ஒன்றாகும். மேலும், இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது
அவகேடோ
இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் உட்பட ஏராளமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவை பராமரித்து, இதய தசைகளின் செயல்பாட்டை சீராக வைக்கிறது
நட்ஸ்
பாதாம், முந்திரி மற்றும் பிரேசில் பருப்புகள் போன்ற நட்ஸ் வகைகள் மக்னீசியம் நிறைந்த சிறந்த மூலமாகும். மேலும், இதில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
விதைகள்
விதைகளில், குறிப்பாக பூசணி விதைகள், சியா விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் போன்றவை மெக்னீசியம் நிறைந்தவையாகும். இதில் உள்ள நார்ச்சத்துக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை இதய ஆரோக்கியத்தில் பங்களிக்கிறது
கொழுப்பு நிறைந்த மீன்
கானாங்கெளுத்தி, மத்தி மற்றும் சால்மன் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. இது தவிர, இதில் நல்ல அளவிலான மக்னீசியம் சத்துக்கள் உள்ளது. இவை இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது