இன்று பெரும்பாலானோர் கொலஸ்ட்ராலைக் குறைக்க சில மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துவர். ஆனால், அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளின் உதவியுடன் நாம் கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும்
ஆரோக்கியமான உணவு
நிறைவுற்ற, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. இதனைத் தவிர்த்து நார்ச்சத்து மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்
உடற்பயிற்சி
போதுமான உடல் செயல்பாடு இல்லாதது கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துகிறது. எனவே உடற்பயிற்சி செய்வதன் மூலம் இயற்கையாகவே கொலஸ்ட்ராலை குறைக்கலாம். மேலும் இவை இதய நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது
ஆரோக்கியமான உடல் எடை
அதிக உடல் எடை கொலஸ்ட்ரால் அதிகரிக்க பங்களிக்கிறது. இது ட்ரைகிளிசரைடு அளவையும் அதிகரிக்கலாம். எனவே ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்
போதுமான உறக்கம்
தூக்கமின்மையால் இதய நோய் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும் இது கெட்ட கொழுப்பு அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. எனவே ஒரு நாளைக்குக் குறைந்த 8 மணி நேரம் தூங்குவது கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது
புகைபிடிப்பதை நிறுத்துதல்
புகைபிடித்தல் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகளைப் பாதிப்பதுடன், கொலஸ்ட்ரால் அளவையும் பாதிக்கும். புகைபிடிப்பதை விட்டு விடுவதன் மூலம் கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை மேம்படுத்தலாம்
மது அருந்துதல்
அடிக்கடி அல்லது அதிகமாக மது அருந்துவது எல்டிஎல் கொழுப்பை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மோசமாக்குகிறது. இது கல்லீரல் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே மது அருந்துவதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது