மாரடைப்பை தவிர்க்க இந்த 5 வழிகளை பின்பற்றவும்!

By Karthick M
15 Feb 2024, 19:06 IST

மாரடைப்பு தடுப்பு வழிகள்

தவறான உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இதயம் தொடர்பான பல நோய்கள் ஏற்படுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் இந்த 5 வழிகளை பின்பற்றலாம்.

அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம்

இதுகுறித்து மருத்துவர் கூறிய தகவலை பார்க்கலாம். சிகரெட், மது போன்ற பழக்கங்களால் கொலஸ்ட்ரால் இரத்த அழுத்தம் போன்ற நோய்களை ஏராளமானோர் சந்திக்கின்றனர். அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. இதை தவிர்ப்பது நல்லது.

சிகரெட் புகைக்க வேண்டாம்

சிகரெட் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க இதை உட்கொள்ள வேண்டாம்.

கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கவும்

கொலஸ்ட்ரால் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக அவசியம். இதற்கு தினமும் உடற்பயிற்சி செய்து ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்.

இரத்த சர்க்கரை அளவு

நீரிழிவு நோயாளிகளுக்கு மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கும். நீங்கள் நீரிழிவு நோயாளிகளாக இருந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும்.

எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்

அதிக உடல் எடை மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

உடற்பயிற்சி செய்யுங்கள்

மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க முறையாக உடற்பயிற்சி செய்வது அவசியம். மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க விரும்பினால் இவை அனைத்தையும் செய்யவும்.