அதிகம் வேலை செய்வது இதய ஆரோக்கியத்தை பாதிக்குமா?

By Gowthami Subramani
29 Sep 2024, 12:49 IST

அதிக வேலை செய்வதற்கும் இதய ஆரோக்கியத்திற்கும் தொடர்பு உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், மனதையும் உடலையும் அதிக நேரம் வேலை செய்யத் தள்ளினால் இதயத்தில் பக்க விளைவுகள் ஏற்படலாம்

வாரத்திற்கு 35-40 மணிநேரத்திற்கு அப்பால் வேலை செய்வது பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் போன்றவை வருவதற்கான அதிக ஆபத்துடன் இணைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது

வேகமாக சாப்பிடுவது

சில நேரங்கள், உணவை வேகமாக சாப்பிடுவது இயல்பானது. எனினும், இதை அன்றாட விஷயமாக மாற்றினால் குறைவான பழங்கள், காய்கறிகளை உள்ளடக்கிய ஆரோக்கியமற்ற கொழுப்புகள் உள்ளடக்கம் அதிகமாகலாம். இது இவை இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்

மோசமான தூக்கம்

நீண்ட நேரம் வேலை செய்வதால் நாள் முழுவதும் அதிக மன அழுத்தம் ஏற்படலாம். இதனால் போதிய தூக்கத்தப் பெற முடியாத நிலை உண்டாகலாம். இது இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கலாம்

உட்கார்ந்த வாழ்க்கை முறை

இன்று பலரும் நீண்ட நேரம் அதிலும் மணிக்கணக்கில் உட்கார்ந்து வேலை செய்வர். இந்த உட்கார்ந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது

புகைபிடிப்பது

நீண்ட நேரம் வேலை செய்வதால் ஏற்படும் நிர்வகிக்கப்படாத மன அழுத்தம் மற்றும் பதட்டம் காரணமாக, ஒரு நபர் புகைபிடித்தல் அல்லது குடிப்பழக்கத்தைக் கையாளுகின்றனர். இது இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்

இதய நோய்க்குக் காரணமான மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைத் தவிர்க்க சில ஆரோக்கியமான நடவடிக்கைகளைக் கையாள வேண்டும்